Thursday, December 6, 2007

முறுக்கு  





அளவு

அரிசி(IR 20) - 2 உழக்கு


உளுந்து -- 1 உழக்கு


உளுந்தை வாசம் வரும் வரை வறுத்து திரிக்கவும்.அரிசியை வழு வழுவென்று கட்டியாக ஆட்டி, சிறிது எண்ணெய் சேர்த்து , உழுந்தை கட்டி விழாமல் கலக்கவும்.மாவை ரொம்ப கட்டியாக பிசைய வேண்டாம்.மிதமாக இருக்க வேண்டாம். அப்படி என்றால் தான் முறுக்கு வழு வழுவென்று வரும்..
சிறிது எள் அல்லது ஓமம் சேர்த்து கொள்ளவும்.
செய்து பார்த்து எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.


இப்படிக்கு

அன்புடன்
சாப்பிட வாங்க

Tuesday, November 27, 2007

வணக்கம்  

எல்லாத்துக்கும் வணக்கம்

ரொம்ப நாளா எழுத வேண்டும் என்ற ஆசை..
எப்படி தொடங்க என்ற யோசனனயில் நாட்கள் கடந்து விட்டன....சரி ,பொதுவா எழுதலாம் நினனச்ச வற்றாத சரக்கு வேண்டும்!!அதனால ,கொஞ்சம் சமையல் ,கொஞ்சம் அரட்டை என முடிவு செய்து பதிவு ஆரம்பிச்சாச்சு.... என் partner தான் கொஞ்சம் தள்ளி போடு, நான் பட்ற கஷ்டம் போதும் ,நீ எழுத வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.கேட்ட நான் போடற குறிப்பு பார்த்து யாராவது சமைத்து , அவர்களுக்கு ஒன்றும் செய்ய கூடாது என்ற நல்ல எண்ணமாம்.அதையும் மீறி இதோ வந்து விட்டேன் , பாராக..பாராக்.....வாங்க சாப்பிட்டு கிட்டே கொஞ்சம் பேசலாம்.............நாம் சாப்பிட போவது எண்ணெய் குறைந்த ஆரோக்கிய சமையல்.....நான் சமைக்க வந்த கதையை தனிய பதிவு எழுதறேன் ,இப்பயே எழுதுன யாரும் சாப்பிட வர மாட்டீங்க......அப்பா ,இத்தண்டு type பண்ணவே அரைமணி நேரம் ஆகி விட்டது ...எல்லாரும் எப்படி தான் 3-4 பக்கம் type பண்ணிரிங்கசொற் குற்றம் , பொருட் குற்றம் இருப்பின் மன்னிக்க வேண்டும்

இப்படிக்கு

அன்புடன்
சாப்பிட வாங்க